சென்னையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.. மீண்டும் ஒரு ரயில் விபத்து : நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 6:59 pm

சென்னையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.. மீண்டும் ஒரு ரயில் விபத்து : நடந்தது என்ன?

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய விரைவு ரயில் ஆனது.பேஷன் பிரிட்ஜ் பணிமனைக்கு செல்லும் பொழுது அதில் ஒரு பகுதியாக ஒரு பெட்டியில் நான்கு சக்கரம் தண்டவாளத்தில் தடம் புரண்டு கீழே இறங்கியதால் விபத்து ஏற்பட்டது.

இதனால் அங்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயிலானது சென்னை சென்ட்ரலில் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைகளில் பழுது பார்ப்பதற்காக சென்ற ரயிலானது தடம் புரண்டு தண்டவாளத்தின் கீழ் இறங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் அப்புறப்படுத்தி இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் சரி பாக்கும் பணியில் ஈடுபட்டனர்,

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பணியானது தற்போது முடிவடைந்து லைலை பணிமனைக்கு கொண்டு சென்றனர். பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 363

    0

    0