கோவை ரயில் நிலையத்தில் செல்போனை தவறி விட்டு சென்ற பயணி : பாதுகாப்பாக உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2022, 2:42 pm
கோவை : கோவை ரெயில் நிலையத்தில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சவுமியா பர்வீன். இவர் கோவை ரெயில் நிலையத்திற்கு டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனது செல்போனை ரெயில் நிலையத்திலேயே விட்டு சென்றார்.
பின்னர் அங்கு ரோந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசார் அந்த செல்போனை மீட்டு அங்கிருந்த பயணிகளிடம் அந்த செல்போனில் குறித்து கேட்டனர்.
அதற்கு அங்கிருந்தவர்கள் இந்த செல்போன் தங்களுடைய இல்லை என்றனர். உடனே போலீசார் அந்த செல்போனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் சிறிது நேரம் கழித்து அந்த செல்போனுக்கு அழைப்பு வந்தது.
அதில் பேசிய சவுமியா பர்வீன் அந்த செல்போன் தன்னுடைய எனவும், எங்கு தொலைத்தேன் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அதற்கு போலீசார் கோவை ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் இருப்பதாகவும் வந்து பெற்றுக் கொள்ளும்படியும் தெரிவித்தனர்.
இதையடுத்து சவுமியா பர்வீன் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி செல்போனை திருப்பி ஒப்படைத்தார். சவுமியா பர்வீன் செல்போனை மீட்டு வைத்திருந்த போலீஸ் ரம்யாவிற்கு நன்றி தெரிவித்து போலீசாரை பாராட்டி சென்றார்