பேருந்துக்குள் பெய்த கனமழை… குடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் : அரசு பேருந்தில் பயணிகள் கடும் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 10:21 pm

திண்டுக்கல் : அரசு பேருந்தில் மழைநீர் வடிந்ததால், பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும் பயணிகள் நின்ற நிலையில் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் ஆரம்பத்த நிலையில் (இன்று மே 4) நிலையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பணிமனையில் சொந்தமான TN 57 N 1887 நம்பர் கொண்டு பேருந்து. தேனியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து -மதுரை ஆரப்பாளையம் மாலை சென்றது.

அப்போது மதுரை அவுட்டார் பகுதிக்கு வரும்போது மழையின் காரணமாக பேருந்து முழுவதும் அதிகஅளவு மழைநீர் வடிந்துள்ளது. இதனால் பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும், மழையால் அனைத்து இருக்கைகளும் ஈரமானதால் பயணிகள் நின்றபடியே பயணம் செய்துள்ளனர். மேலும், நின்றபடியே பயணம் செய்தாலும் பெரும்பாலான பயணிகள் மழையில் நனைந்தபடியே சென்றுள்ளனர்.

இதனால் கல்லூரி மாணவர்கள்,வயதனவர்கள்,பெண்கள் சிரமங்களை சந்திதனர். தங்கள் கொண்டு வந்த பைகளுக்கு முழுவதும் நனைந்ததால் ஆவதி உள்ளாகினர். இதற்கு போக்குவரத்து நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி பேருந்துகளை கண்காணித்து அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பயணிகளின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?