திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்… 1 கிலோ தங்கம் பறிமுதல் : விசாரணையில் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 9:51 am

திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்… 1 கிலோ தங்கம் பறிமுதல் : விசாரணையில் ஷாக்!!

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட பயணிகளை அழைத்து அவர்களின் உடமைகளை தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் 3 பயணிகளின் அட்டை பெட்டியின் உள் பகுதியில் நூதன முறையில் மறைத்து கடத்தி வந்த 1கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூன்று பயணிகளையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் யாருக்காக இதை கடத்தி வந்தார்கள் கொடுத்து அனுப்பியது யார் என்று பல்வேறு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்திவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…