பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண் பாலியல் பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய சர்ச் ஊழியர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2024, 12:07 pm

திருத்தணியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அண்மையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் செயல்படும் சர்ச் ஒன்றில் ஊழியம் செய்வதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சர்ச்சில் ஊழியம் செய்துவந்துள்ளார்.

இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?

அந்த சர்ச்சுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் பாவமன்னிப்பு கோரி சர்ச்சுக்கு வந்துள்ளார். இதில் சர்ச் ஊழியர் மகேஷிற்கும் அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்படவே அதனை பயன்படுத்தி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகியுள்ளார்.

Pastor Arrested for Woman Raped

தற்சமயம் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் அந்தப் பெண்ணையும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை செய்து காவல்துறையினர் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Simbu Nayanthara Vallavan shooting incident நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!