தேவர் குரு பூஜை அன்று பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனர்.
ராமநாதபுரம்: வருடந்தோறும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது ஆயிரக்கணக்கான பேர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதிக்கு வருவர். அவ்வாறு வரும் அவர்கள், அங்கு உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், இவ்வாறு வருபவர்கள் இளைப்பாறும் வகையில், பசும்பொன்னில் 1.55 கோடி ரூபாயில் பிரமாண்டமான முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த அரங்கத்தை இன்று (அக்.28) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன்படி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா வருகிற 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளார்.
அதேபோல், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 10.30 மணிக்கும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10.00 மணிக்கும் மரியாதை செலுத்துகின்றனர்.
இதையும் படிங்க: உயிர் போயிடுச்சு.. இரங்கல் சொல்லாத விஜய் வருங்கால முதல்வரா? புஸ்ஸி ஆனந்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!
அவர்களைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரும் மரியாதை செலுத்துகின்றனர். இதன் காரணமாகவும், அங்கு வரும் பொதுக்களுக்காகவும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, தேவர் குரு பூஜை இன்று தொடங்கியுள்ளது. இன்று ஆன்மீக விழாவாகவும், நாளை அரசியல் நிகழ்வாகவும், நாளை மறுநாள் ஜெயந்தி நிகழ்வாகவும் கொண்டாடப்படும்.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.