வெளியானது “பத்தல..பத்தல.” பாடல். இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Author: Rajesh
1 July 2022, 7:18 pm

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பத்தல பத்தல’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றது. மேலும், பாடல் வெளியான தினம் முதல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் தொடர்ந்து முணுமுணுக்கப்பட்டது.
திரைப்படத்தில் முழுமையான பாடல் இடம் பெறததால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். அந்தப் பாடலின் முழு வீடியோ ஜூலை 1இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்தப் பாடலின் முழு வீடியோ வெளியிடப்படுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்பாடலில் ஆரம்பம் முதலே, ஒன்றிய அரசை விமர்சிக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ பாடலில் இந்த வரிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…