மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நோயாளி… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மக்கள்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
8 April 2022, 9:02 am

செங்கல்பட்டு : நோயாளி ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புலிப்பாக்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென அந்த நபர், மூன்றாவது மாடியில் மீது ஏறி குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ந்து போன அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தற்கொலைக்கு முயன்ற இளைஞரை இலாவகமாக காப்பாற்றினார்

காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் பெயர் சந்திரசேகர் என்றும், அவர் சற்று மனநிலை சரியில்லாமல் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

https://vimeo.com/697230827
  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!