கடலில் விழுந்த மூவர் மீட்பு,ஒருவர் மாயம்-பதட்டத்தில் பட்டுக்கோட்டை மீனவர்கள்!

Author:
29 June 2024, 2:13 pm

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் நொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ஆரோக்கியம், பழனிச்சாமி, விஜயராகவன் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கடலில் காற்று அதிகமாக இருந்ததன் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஆரோக்கியம், பழனிசாமி, விஜயராகவன் ஆகிய மூன்று மீனவர்கள் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், அந்தோணி நிலை என்னவென்று தெரியாமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தனது சகோதரியின் கணவர் அந்தோணியின் நிலை என்ன என்று தெரியாமலும் தனது சகோதரி மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து 5 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்தோணியின் மைத்துனர் 28 வயதுடைய வேதேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இறந்த வேதேஸ்வரன் உடல் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.காணாமல் போன மீனவர் அந்தோணியை கண்டுபிடித்து தர வேண்டும் என அந்தோணி மனைவி மற்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தூக்கு மாட்டி இறந்த நிலையில் கடலுக்குச் சென்ற மற்றொருவர் நிலை என்ன என்று தெரியாமல் நொண்டி தோப்பு பகுதியில் உள்ள மீனவர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 256

    0

    0