அமைதியும் திரும்பல, ஒண்ணும் திரும்பல… எல்லாமே சுத்தப் பொய் : மணிப்பூர் குறித்து கனிமொழி காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2023, 7:12 pm

திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சமூகத்தினருக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை.

முதலமைச்சரோ அமைச்சர்களோ மக்களை சென்று சந்திக்காத ஒரு சூழ்நிலையில், பல இடங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் பெண் எம்பிக்கள் மட்டுமே சந்தித்தனர். அவர்கள் மனரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்களும் தங்களுக்கு நியாயம் நீதி கிடைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை கொண்டு போய் அந்த வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தது என வருத்தத்துடன் தெரிவித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அங்கு அமைதி இருப்பது போல ஒரு சூழல் நிலவுகிறதே தவிர உண்மையில் அமைதி திரும்பவில்லை. பாதுகாப்பு வேண்டுமென்று மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். எனவே, இதனால் நிச்சயமாக அங்கு அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய் என திமுக எம்.பி.கனிமொழி கூறினார்.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!