நடுரோட்டில் மருமகள், பேத்தி.. மாமனார் மீது வனத்துறையினர் தாக்குதலா? தர்மபுரியில் பரபரப்பு!

Author: Hariharasudhan
18 December 2024, 6:52 pm

தர்மபுரியில் மலைப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த நபரை நடுரோட்டில் அடித்து அழைத்துச் சென்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளனர்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தை ஒட்டிய மலைப் பகுதிகளின் அடிவாரங்களில் பல கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த கிராமங்களில் சில பகுதிகள், வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இதனைக் காரணமாக வைத்து அவ்வப்போது, வீடுகளில் உள்ளோர், பெண்களை வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு, ஒகேனக்கல் மணல்மேடு பகுதியில் ஒரு வீடு வனத்துறையினரால் சூறையாடப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒரு பகுதியில், மாமனார், தனது மருமகள் மற்றும் பேத்தி உடன் சாலையில் சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த வனத்துறையினர், காரணம் ஏதும் கூறாமல் மாமனாரைத் தாக்கி அழைத்துச் சென்றதாகவும், மருமகள் மற்றும் பேத்தியை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

People alleges forest officials in Dharmapuri Eriyur

இதனால், மருமகள் மற்றும் பேத்தி உடல்நலம் சரியில்லாத நிலையில், நடுவழியில் சுமார் 4 மணி நேரமாக இருந்ததாகவும், பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குளிக்கும் போது கூட அத மட்டும் பண்ணவே மாட்டேன்… தமன்னா ஓபன் டாக்!!

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மாமனாரை எதற்காக அழைத்துச் சென்றனர் என்ற காரணத்தைக் கேட்டும், இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் ஏரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • Lokesh Kanagaraj Mr. Bharat movie ரஜினி பட பெயரை தட்டி தூக்கிய லோகேஷ்… வெளியானது அடுத்த படத்தின் PROMO!
  • Views: - 49

    0

    0

    Leave a Reply