மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மக்னா யானை… கிருஷ்ணகிரியில் இருந்து வால்பாறை நகருக்கு உலா வருவதால் மக்கள் அச்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2023, 9:47 am

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மக்னா யானை… கிருஷ்ணகிரியில் இருந்து வால்பாறை நகருக்கு உலா வருவதால் மக்கள் அச்சம்!!

கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானையை மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி வனத்துறை வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னக்கல்லார் வனப்பகுதியில் கடந்த மாதம் விடப்பட்டது.

மக்னா யானைக்கு ரேடியோ காலர் ஐடி(சேட்லைட்) பொருத்தப்பட்டுள்ளதால் யானை நடமாட்டத்தை வனத்துறை அமைத்துள்ள தனி குழுவும் தொடர்ந்து கண்காணித்தும் தேயிலை தோட்ட தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால் குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறை உயர் அதிகாரி உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் சின்ன கல்லார் பகுதியில் இருந்து வெளியேறி மக்னா சிறு குன்றா சாலை வழியாக வந்த மக்னா வால்பாறை டவுன் அருகில் முகாம்ட்டுள்ளது.

https://vimeo.com/857759171?share=copy

நகரப் பகுதிக்கு மக்னா நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…