தற்போதையை ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் துடிக்கிறார்கள்.. 2024ல் இதற்கு விடை கிடைத்துவிடும் : தமிழ் மகேன் உசேன் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan18 November 2022, 8:12 pm
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் துடித்துக் கொண்டிருப்பதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அஷ்ரத் சையத் அதவுல்லா ஷா காதிரி தர்காவில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மாவட்ட கழக செயலாளர் சிறுனியம் பலராமன் மற்றும் கட்சியினர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்கவும் நிரந்தர பொது செயலாளராக தொடரவும்
சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக பிரார்த்தனை செய்து துவா ஓதி மீண்டும் அவர் முதல்வரானது போன்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
அதற்காக கட்சியினருடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரார்த்தனை செய்து வருவதாகவும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் துடித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
மோசமான ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழக விடியா ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எப்போது போகும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் மக்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்து மிகப் பெரும்பான்மையான இடங்களை பெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் என அவர் தெரிவித்தார்.