மேலூரில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா: கெளுத்தி, ஜிலேபி, அயிரை, விரால் மீன்களை கொத்து கொத்தாக அள்ளிய மக்கள்!!

Author: Rajesh
7 May 2022, 8:57 am

மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து சென்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பெரியகண்மாயில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து மேலூர், திருவாதவூர், மாங்குளம், சிட்டம்பட்டி, வெள்ளரிபட்டி, தேற்குதெரு, மானிக்கம்பட்டி, என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, ஊத்தா, உள்ளிட்டவற்றை கொண்டு, கிராம பெரியவர்கள் அனுமதி அளிக்கும் முன்னரே கண்மாயில் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர்.

இதில் கட்லா, ரோகு, விரால், சிலேபி என பல்வேறு வகையான நாட்டுமீன்கள் கிடைத்த நிலையில் அவற்றை ஆர்வமுடன் தங்களது இல்லங்களுக்கு எடுத்து சென்றனர்.

மழை பொழிந்து, நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய முறைப்படி நடைபெறும் இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 1083

    0

    0