தவெக கொடியுடன் காரில் வந்தவர்களுக்கு தர்மஅடி.. போதையில் தள்ளாடிய Ex விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

Author: Hariharasudhan
2 February 2025, 3:59 pm

தவெக கொடியுடன் வந்த கார் விபத்தை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்தவர்கள் மதுபோதையில் இருந்ததால் பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தனியார் நிறுவனம் சார்பில், இன்று மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இது, போதைப் பொருள் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டுள்ளது.இதில், சிறுவர் சிறுமிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்படி, இதில் கலந்து கொண்டவர்கள், மலைக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டியபடி கார் ஒன்று வந்துள்ளது. பின்னர், திடீரென அந்த கார் சாலையில் எதிரே நின்று கொண்டிருந்த தண்ணீர் வண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது.

TVK Accident

இதில் அந்தக் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும், காரை ஓட்டியவர்களும் லேசான காயமடைந்ததால், அருகில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். அப்போது, அந்தக் காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, போதையிலே காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: 1967, 1977 அரசியல் அதிர்வு.. 2026 தேர்தலே இலக்கு.. தொண்டர்களுக்கு விஜய் உணர்ச்சிகர கடிதம்!

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காரில் இருந்த மூன்று பேரை வெளியே இழுத்து தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர், சிவகங்கை, பலக்கோட்டை விஜய் மக்கள் இயக்க முன்னாள் ஒன்றியச் செயலாளராக இருந்த மணி என்பது தெரிய வந்துள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?