நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிகும் மக்கள்.. அடிப்படை வசதி செய்து தரவில்லை என பேனர் வைத்து எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 1:46 pm

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிகும் மக்கள்.. அடிப்படை வசதி செய்து தரவில்லை என பேனர் வைத்து எதிர்ப்பு!!

கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதி மக்கள், அரசாங்கம் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறி இந்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக சாலையோரம் பேனர் வைத்துள்ளனர்.

இது குறித்து சிவாஜி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில், “சிவாஜி காலனி பகுதிகளில் செளடாம்பிகா நகர், சிம்சன் நகர், பல வருடங்களாக ரோடு போட்டுத் தரவில்லை.

சாக்கடை வசதியும் இல்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இன்றுவரை ரோடு மற்றும் சாக்கடை வசதி செய்து தரவில்லை.

ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம். யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என உறுதி கூறுகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பேனர் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் புஸ்பானந்தம், மற்றும் சிவாஜிகாலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் நடராஜன் ஆகியோரால் வைக்கப்பட்டுள்ளது.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!