இருளில் மூழ்கிய மக்கள்.. இரவு நேரத்தில் விட்டு விட்டு மின்வெட்டு : வீதியில் இறங்கி போராடிய மக்கள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 2:18 pm

சென்னை அயப்பாக்கம் அருகே கடந்த ஒரு வாரமாக அயப்பாக்கம் – திருவேற்காடு சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர், அபர்ணா நகரில் விட்டு விட்டு மின் விநியோகம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு மட்டும் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான அப்பகதி மக்கள், மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து வந்த ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயில் காவல்துறையினர் மக்களை சமாதானம் செய்தனர். ஆனால் தொலைபேசியில் அழைத்தும், நேரில் சந்திக்க வராத மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 மணி நேரமாக போராட்டம் நடந்ததால் அப்பகுதிக்கு வந்த ஆவடி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் பொதுமக்களை சமாதானம் செய்தார்.

மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து : அலறிய பயணிகள்..!!

அப்பகுதி மக்களிடம் பேசிய போது, அறிவிக்கப்படாத மின்வெட்டில் அவதிப்படுவதாகவும், தொடர்ந்து 2 மணி நேரம் மின்வெட்டு காரணமாக போராட்டத்தில் இறங்கியதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்படுவதாகவும், பணி நேரம் முடிந்து வீட்டுக்கு வந்தால் ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 315

    0

    0