வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ள மக்கள்.. திருமா, சீமான் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 11:54 am

மக்கள் வலுவான எதிர்கட்சியை தேர்வு செய்தது ஜனநாயக நல்ல ஆரோக்கியமான அறிகுறி நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

டெல்லியில் பிரதமர் மோடி 3வது முறையாக பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இது ஒரு சாதனை அவருக்கு பாராட்டுக்கள்… மக்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறி…

அடுத்த 5 ஆண்டுகள் நல்லதான ஆட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள திருமாவளவன் மற்றும் சீமானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!