விட்டா கிடைக்காதுல.. தூக்குல தூக்கு ; முதல்வரை வரவேற்க வைத்திருந்த கரும்பு, வாழைத்தாரை அள்ளிய மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 11:57 am

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து, தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக அவரை வரவேற்க நுழைவாயிலின் முன்பு வாழைத்தார்கள் கரும்புகள் இளநீர்கள் உள்ளிட்ட தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்துவிட்டு அவருடைய கார் கிளம்பியதைப் பார்த்த பொதுமக்கள் நுழைவாயிலில் வைக்கப்பட்டு இருந்த வாழைத்தார், கரும்பு,இளநீர் உள்ளிட்டவைகளை ஏலே அண்ணா அக்கா இந்த சான்ச விட்டா கிடைக்காதுலே தூக்கிட்டு ஓடிலே ஓடு என பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார் கரும்பு இளநீர்களை வெட்டி குழந்தையை தூக்குவது போல் தூக்கிக்கொண்டு வேக வேகமாக ஓடிச்சென்றனர்.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?