கோடையால் தவிக்கும் கோவை மக்கள்… குடிநீர் தட்டுப்பாட்டால் வீதியில் இறங்கி போராட்டம்!!!
Author: Udayachandran RadhaKrishnan29 மார்ச் 2023, 4:09 மணி
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதலே தண்ணீர் தட்டுப்பாடு துவங்கியுள்ளது. குறிப்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே நிலவி வருகிறது.
இந்த தட்டுப்பாட்டை போக்க ஆங்காங்கே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் குடிநீர் சரிவர வராததால் பொதுமக்கள் புலியகுளம் விநாயகர் கோவில் முன்பு ஒன்று கூடினர்.
காலி குடங்களுடன் ஒன்று கூடிய 20 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த இராமநாதபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதேபோல் கடந்த வாரம் குனியமுத்தூர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் குடித்தண்ணீர்காக தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
0
0