வீடுகளை ஒதுக்குவதில் முறைகேடு ; திருச்சியில் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
25 March 2023, 12:04 pm

திருச்சி : வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி வீடுகள் மற்றும் 75 வீடுகளும் தற்போது பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குலுக்கள் முறையில் பயனாளிகளுக்கான வீடு ஒதுக்குவதற்கான தேர்வு திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு முறையான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமலும், குறிப்பாக, கல் மந்தை பகுதியில் வசித்து வந்த சிலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பூலோகநாதர் கோவில், சந்து கடை, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 பேருக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த முற்றுகை போராட்டம் குறித்து பாதிக்கப்பட்ட பயனாளி பெண் கூறுகையில்:- திருச்சி கல்மந்தை பகுதியில் காலங்காலமாக குடியிருந்து வருகிறோம். இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் கூலி தொழில் மற்றும் துப்புரவு பணி செய்பவர்கள் அதிகம் உள்ளனர்.

தற்போது கல் மந்தை குடிசை மாற்று வாரியத்தில் ஒடுக்கப்பட்டுள்ள வீடுகளில் முறையான அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படாமல், மற்ற ஏரியாவை சேர்ந்த 40 பேருக்கு முறைகேடாக வீடுகள் வழங்கப்பட உள்ளதை கண்டித்து இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக முதலமைச்சரும், திருச்சி மாவட்ட கலெக்டரும் தலையிட்டு முறையாக பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க உதவி செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 588

    0

    0