பழனியில் கொட்டித் தீர்த்த கனமழை.. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்.. கடும் அவதியில் மக்கள்!

Author: Hariharasudhan
13 December 2024, 2:23 pm

திண்டுக்கல்லில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.

திண்டுக்கல்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று (டிச.12) இரவு முதல் இன்று காலை வரை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், பெய்து கொண்டே இருந்த கனமழையால் அணைகள், ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Palani Rain water logged in houses

குறிப்பாக, அணை மற்றும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையையும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுற்றுலாத் தலமான கொடைக்கானலின் தாழ்வானப் பகுதிகள் மற்றும் அங்குள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதையும் படிங்க: திடீரென ஆடையைக் கழற்றிய இளைஞர்.. ஷேர் ஆட்டோவில் ஆபாச செயல்.. வெளியான ஷாக் வீடியோ!

மேலும், பல்வேறு இடங்களில் மின் விநியோகமும் தடைபட்டது. இவ்வாறு கொடைக்கானலில் உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், மலைக்கிராமங்களின் வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டன. அதனால் மலைக்கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

Palani Rain water logged in many places

மழைக்கு பல இடங்களில் மின்கம்பங்கள், கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தன. முக்கியமாக, பழனி – கொடைக்கானல் மலைச்சாலை, பழனி வண்டி வாய்க்கால் பகுதியில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேபோல், பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டியில் வாய்க்கால் கரை உடைந்து, அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மின் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்க் ஆளாகினர்.

  • Saif Ali Khan attacked by Knife in his house at Mumbai பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!