இருபிரிவினர் இடையே மோதல்… நார்த்தாமலை ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்… வாடிவாசல் முன்பு போராட்டத்தால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 11:33 am

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இரு பிரிவினர் இடையே மோதல் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும்.

அவ்வாறு கோவில் காளைகள் அவிழ்த்து விடும் போது, இரு ஊர் பொதுமக்களிடையே ஏற்பட்ட பிரச்சனையால் மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதெல்லாம் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தற்போது வாடிவாசல் முன்பாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பத்துக்கு மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!