வீட்டை விட்டு வெளியே போக பயப்படும் மக்கள்… தெருநாய்கள் தொல்லையால் கடும் அவதி : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 7:56 pm

வீட்டை விட்டு வெளியே போக பயப்படும் மக்கள்… தெருநாய்கள் தொல்லையால் கடும் அவதி : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த தென்னமர தெரு ரெட்டியப்பன் தெருக்களில் நாய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது இதனால் அவ்வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர்

மாணவர்கள் செல்லும் போது தெருநாய்கள் அவர்களை துரத்தி செல்வதும், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது வாகனங்களை துரத்தி செல்வதால் அச்சமடைந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு சிறு சிறு காயங்கள் அடைந்து வருகின்றனர் இதனால் அவ்வழியாக செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டிகள், அச்சப்பட்டு வருகின்றனர்.

இதனை போர்க்கால அடிப்படையில் வேலூர் மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ