கைராசியான மருத்துவர்… பணத்தை கொட்டிய மக்கள் : ₹1.5 கோடி ரொக்கத்துடன் எஸ்கேப்!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 10:07 pm

கைராசியான மருத்துவர்… பணத்தை கொட்டிய மக்கள் : ₹1.5 கோடி ரொக்கத்துடன் எஸ்கேப்!

கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சித்தையா. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் இருதயத் துறை பேராசியராகவும், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற சித்தையா அதன் பிறகு கோவையில் மூன்று இடங்களில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றிய இ.சி.ஜி டெக்னீசியன் விஜயலட்சுமி என்பவரிடம் தனது மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும்,வெளிநாட்டில் படித்து வரும் தனது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு வழியில்லாமல் இருப்பதாக கூறி 8 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

அதற்காக பாண்டு பத்திரத்தில் எழுதி கொடுத்தோடு,கையெழுத்திட்ட காசோலையையும் கொடுத்துள்ளார்.கடந்த 2017ல் பணம் வாங்கிய பணத்தை தற்போது வரை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

மேலும் விஜயலட்சியின் பேத்தியிடமும் 2 லட்சம் வாங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி கைராசி மருத்துவர் என நம்பி சித்தையாவிடம் மருத்துவம் பார்க்க வந்த காங்கேயம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளிடம் அவர்களது உறவினர்களிடமும் 10 லட்சம் வரை இதே காரணங்களை சொல்லியும் பாண்டு பத்திரம் எழுதிகொடுத்தும் பணத்தை வாங்கியுள்ளார்.

அதே போல கிளினிக்கிற்கு வரும் மருந்தக பிரதிநிதிகளிடம் வாங்கிய மருந்துக்கு பணம் கொடுக்காமல் இதே காரணங்களைக் கூறி பல லடசங்களை வாங்கி மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் இன்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.புகார் அளித்தவர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அவரிடம் இருந்து எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 381

    0

    0