முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா? மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க : திமுக மீது ஜிகே வாசன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 8:42 pm

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா? மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க : திமுக மீது ஜிகே வாசன் விமர்சனம்!

தென் மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கட்சி ஆதரிக்க வேண்டும் 10 வருட காலம் மோடியின் சாதனையே எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

திமுக ஆட்சி அனைத்து தர மக்களும் நினைக்கிறார்கள் இந்த முறை வாக்கு எதிர்மறையாக தான் இருக்கும். என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

மதுரை பாராளுமன்ற வேட்பாளர் படித்தவர் பண்பானவர் மதுரை பாராளுமன்ற தொகுதியின் வரைபடத்தை நன்கு அறிந்து புரிந்து செயல்படுபவர்.

வரும் நாட்களில் மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் போட்டியிருக்கிறார் இதனை மக்களும் புரிந்து வைத்துள்ளார்கள்.

கச்சத்தீவு பிரச்சனை மிகவும் முக்கியமான பிரச்சனை ஒரு காலத்திலேயே காங்கிரஸ் எடுத்த முடிவுக்கு துணை போனது திமுக என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தற்போது வரலாற்றை மறைக்க வேண்டும் மறுக்க வேண்டும் என்று திமுக காங்கிரஸ் இணைப்பதால் மீனவர்களிடம் நீலிக் கண்ணீர் வடிக்க நினைக்கிறார்கள் அது மீனவர் மக்களிடையே ஒருபோதும் எடுபடாது.

முழு பூசணிக்காவை சோற்றில் மறைக்க முடியும் என்று நினைக்க வேண்டாம் மீனவர்கள் தமிழக மக்கள் உங்களை மறக்கவே மாட்டார்கள் அந்த வாக்கு உங்களுக்கு கிடையாது அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் எங்கள் கூட்டணியுடைய சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!