ஆதார் எண் போல தமிழகத்தில் மக்கள் ஐடி : எதுக்கு இந்த ஐடி? தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு?!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 4:14 pm

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடியை தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாகி உள்ளது. மொபைல் சிம் வாங்குவது தொடங்கி வங்கி பரிவர்த்தனை, விமான பயணம் என அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு மூலம் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் இப்போது ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் தனி நபர் அடையாள அட்டையாகும். வங்கி கணக்கு, மொபைல் சிம், பான் கார்டு, ரேஷன் கார்டு என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்,தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் உள்ள மக்கள் ஐடி தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மக்கள் ஐடி சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பெரிதும் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மாநில குடும்ப தரவு தளம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!