அதிமுக ஆட்சி எப்போ வரும்? மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2024, 5:40 pm

அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்வி வேலுமணி பேசியுள்ளார்.

சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., ஓமலுார் மேற்கு ஒன்றியம் மற்றும் தாரமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில், செயல் வீரர்கள் கூட்டம் ஓமலுார் எம்.எல்.ஏ,மணி தலைமையில், எஸ்.எஸ்.கே.ஆர்., மண்டபத்தில் நடந்தது.

சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பங்கேற்று பேசியதாவது: இக்கூட்டத்தில் பேசிய கிளை செயலர்கள் கூறியது போல், திண்ணை பிரச்சாரம் என்பது மிக முக்கியமானதாகும், குடும்ப உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும். கிளை செயலர்கள் தான் அ.தி.மு.க., பேரியக்கத்தின் முதுகெலும்பாகும். அப்படி கட்சிக்கு அரும் பணியாற்றிய கிளை செயலர்கள் தான் தற்போது மேடையில் பலர் உள்ளனர். ஏன், நமது இ.பி.எஸ்.,கிளை செயலராக பணியாற்றி, தற்போது பொதுச்செயலராக உள்ளார்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். கிளைச் செயலர்களுக்கு ‘வசந்த காலம்’ வரும். இ.பி.எஸ்.,ஆட்சியில், ஓமலுார் தொகுதியில் மட்டும், 500 கோடி ரூபாய்க்கு, தார் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சியில் சொத்துவரி, மின்சார கட்டணம் உயர்வு, ஒரு கிலோ அரிசி விலை, 80 ரூபாய் என்பது உள்ளிட்ட, பல்வேறு வரி உயர்வால் மக்கள் கடும் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர். வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,மனித சங்கிலி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது.

22,500 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்த ஒரே அரசு அ.தி.மு.க.,தான். சேலம் மாவட்டத்தில், 11 தொகுதியிலும், அ.தி.மு.க, வெற்றி உறுதி. அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும். ஆளும் கட்சிக்கு, இன்னும், 10 அமாவாசை மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: பொதுச்செயலர் மாவட்டத்தில் நான் பங்கேற்று பேசுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

மக்கள் மத்தியில் ஒரே பேச்சு என்னவென்றால், அ.தி.மு.க., ஆட்சி எப்போ வரும் என்பது தான். 100 ஏரி திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், கோதாவரி–காவிரி இணைப்பு திட்டம் என பல திட்டங்களுக்கு முனைப்பு காட்டியவர் இ.பி.எஸ்.

தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டங்கள் கூட நிறைவேற்றவில்லை. திட்டமே இல்லாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. ஆளும் கட்சியே ஒன்றும் செய்யதா நிலையில், சேலம் எம்.பி.,என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை. லோக்சபா தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு என, மக்களுக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க., ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்து மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது, கடந்த கால சரித்தரம் உண்மையாகும்.

தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினர் பொய்வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். பூத் வாரியாக ஏஜென்டுகள் ஒருவர் தலா, 30 வீடுகளை மட்டும் சந்தித்து, அவர்களை ஓட்டை பெற்றால் போதும் எளிதாக வெற்றி பெறமுடியும். அதிலும் பொதுச்செயலரை வழங்கியுள்ள சேலம் மாவட்டத்துக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது.

சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ்., நல்ல கூட்டணி அமைப்பார் அதில் கவலை வேண்டாம். மனகசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?
  • Close menu