யாக சாலை குண்டத்தில் முதன்முறையாக அமர்ந்து வேள்வி செய்த பெண்கள் ; பேரூர் ஆதினம் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடந்த சுவாரஸ்யம்!!
Author: Babu Lakshmanan2 March 2023, 10:52 am
பேரூர் ஆதினம் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலை வேள்வியில் தமிழகத்தில் முதன் முறையாக யாக சாலை குண்டத்தில் பெண்கள் அமர்ந்து வேள்வி செய்தனர்.
கோவை அருகே உள்ள பேரூர் ஆதீனம் திருக்கோவில் சுமார் 500 வருடம் பழமையானது. சாந்தலிங்க பெருமானால் துவங்கப்பட்ட பெருமைக்குரிய இத்திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வரும் 3ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் முதல் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையி்ல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து, திருக்குடங்களுடன் யாகசாலையை வலம் வந்த சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க குண்டங்களில் வேள்வி தொடங்கியது. இதில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் தமிழகத்தில் முதல்முறையாக பெண்கள் யாக சாலை குண்டத்தில் அமர்ந்து வேள்வி செய்தனர்.