திருச்சி சூர்யா சிவா போட்ட மனு.. நீதிபதி கொடுத்த டோஸ் : அதிர்ந்த நீதிமன்றம்… அதிர்ச்சியில் பாஜக!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 3:58 pm

திருச்சி சூர்யா சிவா போட்ட மனு.. நீதிபதி கொடுத்த டோஸ் : அதிர்ந்த நீதிமன்றம்… அதிர்ச்சியில் பாஜக!!

பாஜகவில் ஓபிசி மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் திருச்சி சூர்யா சிவா. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தான் மக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதால், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது ஃபேஷனாக மாறிவிட்டது” என கருத்து தெரிவித்து, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!