LODGE-க்காக கோவிலை இடிக்கிறதா?.. சிவன் கோவிலை மாநகராட்சி மேயர் இடிக்க முயற்சி..!

Author: Vignesh
2 September 2024, 4:01 pm

கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியார் லாட்ஜை விற்பனை செய்வதற்காக அங்குள்ள சிவன் கோவிலை கோவை மாநகராட்சி மேயர் இடிக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து பேசிய செல்வகுமார், அந்தப் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் எனவும், அந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள ஐஸ்வர்யா லாட்ஜ் மாநகராட்சியில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அங்கு சட்டவிரோதமாக பல்வேறு விஷயங்கள் நடைபெறுவதாகவும் கூறினார்.

அதன் மாடியில் பார் இயங்கி வருவதாக தெரிவித்த அவர் அப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த லாட்ஜின் நிறுவனர் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் அந்த லாட்ஜின் வாகன வசதிக்காக இந்த கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இதற்கு முன்பிருந்த கோவை மேயர் கல்பனா ஆனந்த குமாரும் இந்த கோவிலை இடிக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து, தற்பொழுது உள்ள புதிய மேயரும் கோவிலை இடிப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். கோவை மாநகராட்சியில், பல்வேறு குறைகள் இருக்கின்ற பொழுது கோவிலை இடிப்பதற்கான காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். நீலாம்பூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு மாணவர்களிடம் போதை பொருட்கள் கைப்பற்றியதை குறிப்பிட்ட அவர் இங்கும் மாணவர்கள் எவ்வித கட்டுப்படுமின்றி தங்கி இருப்பதாக தெரிவித்தார்.

திமுகவும் கோவை மேயரும் கோவிலை இடிப்பதில் அக்கரை காட்டாமல் குறைகளை சரி செய்யுங்கள் எனவும் நிர்வாகம் செய்யுங்கள் எனவும் கூறினார். மேலும், இவ்விவகாரத்தில் பாஜக பொதுமக்களை திரட்டி போராடும் எனவும் தெரிவித்தார். அந்த லாட்ஜுக்கு குறித்து ஆர்டிஐ செய்து பார்த்த பொழுது அனுமதி அளித்ததற்கான ஆவணங்கள் மாநகராட்சியிடம் இல்லை என்று தான் பதில் தருவதாக குறிப்பிட்டார்.

இந்த மேயர் பதவிக்கு வந்து ஒரு மாத காலம் தான் ஆகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர் அதற்குள் கோவிலை இடிக்க வேண்டிய அவசரம் என்ன? என கேள்வி எழுப்பிய அவர் மாநகராட்சி மேயர் அப்பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த லாட்ஜை விற்றுக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற காரணத்திற்காகவே கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும் கூறினார். இது குறித்து இவர்கள் அளித்துள்ள மனுவில் லாட்ஜ் இருப்பது மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில், அது தவிர அப்பகுதியில் கோவில் இருப்பதையோ மேயரின் தலையிட்டையோ கோவிலை இடிக்க முயற்சிப்பதையோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!