எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்… கவனத்தை ஈர்த்த சமூக ஆர்வலரின் நூதனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 1:44 pm

எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்… கவனத்தை ஈர்த்த சமூக ஆர்வலரின் நூதனம்!!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள சாலையம்பாளையம் கிராமத்தில் 423 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

இந்த ஏரிக்கு செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பினை அக்கற்றி தூர்வாரக்கோரி அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று சமூக ஆர்வலரான பிரகாஷ் வளவனூர் பேருந்து நிறுத்ததில் எருமை மாட்டிற்கு மாலை அணிவித்து ஏரி வாய்க்காலைந்தூர் வாரக்கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் ஏரி வாய்க்கால் தூர்வாரப்படாததால் கால்நடைகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலத்தடி நீர் மட்டம் 120 அடியிலிருந்து 180 அடிக்கு சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 385

    0

    0