ஒருமாதத்திற்கு மேல் ஆகிருச்சி…நிம்மதி அளிக்கும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

Author: Rajesh
12 May 2022, 8:24 am

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 36வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால், நவ., 4ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின.

இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர்; டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின.

இந்நிலையில் 36 நாட்களாக இன்றும் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ