புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை… ரூ.100ஐ கடந்து அதிர்ச்சி கொடுத்த டீசல்…!!

Author: Babu Lakshmanan
5 April 2022, 8:45 am

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.

ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 109.34 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர்; டீசல் 99.42 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 110.09 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ 100.18 ஆகவும் விற்பனையாகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!