அடேங்கப்பா…மீண்டும் விலை உயரப்போகும் பெட்ரோல், டீசல்?: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க..!!

Author: Rajesh
13 March 2022, 8:23 am

சென்னை: சென்னையில் 129வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 128 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர கூடிய அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனினும் தொடர்ந்து 129வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?