115வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

Author: Rajesh
27 February 2022, 8:17 am

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து 115வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை.

இதனால், சென்னையில் கடந்த பல நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது. இதன்படி 114வது நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.

  • Playback SInger P Jayachandran died இந்தப் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? காலத்தால் அழியாத பாடகர் ஜெயச்சந்திரனின் சுவடுகள்!
  • Views: - 2201

    0

    0