17வது நாளாக வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

Author: Rajesh
23 April 2022, 8:26 am

சென்னை: தொடர்ந்து 17வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வாகன ஓட்டிகளை விழி பிதுங்க வைத்தது. இந்நிலையில், கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், 17வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. நேற்றைய விலைக்கே பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1917

    0

    0