வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் நியூஸ்: இன்றைய பெட்ரோல், டீசல் விலை…எவ்வளவு தெரியுமா ?

Author: Rajesh
11 April 2022, 8:24 am

சென்னை: சென்னையில் 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

ஆனால், கடந்த 4 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 5வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

அதன்படி, சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!