என்னது…பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருக்கா?: இன்றைய நிலவரம் தெரியுமா?

Author: Rajesh
15 April 2022, 8:28 am

சென்னை: சென்னையில் தொடர்ந்து 9வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த 8 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொடர்ந்து 9வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • 500 crore collection news all are fake said by sundar c 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்