பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்கள்? விசாரணையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 4:37 pm

திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டியில் பாஜக பிரமுகர் வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணா நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி (வயது 60) இவர் பாஜக கிளை தலைவராக உள்ளார்.

இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் கல்யாணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது நள்ளிரவில் சுமார் ஒரு மணி அளவில் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் வீட்டின் முன்புற பகுதியில் ஜன்னல், மின்சாதன பெட்டி பகுதியில் தீப்பிடித்து எரிந்தது, உடனடியாக வீட்டின் வெளியே வந்த கல்யாணி தீயை அணைத்தார்.

இதுகுறித்து கல்யாணி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பெட்ரோல் கொண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 413

    0

    0