ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. தப்பியோடிய இருவர்.. சிசிடிவி காட்சி வைத்து போலீசார் தேடுதல்வேட்டை!!

Author: Babu Lakshmanan
24 September 2022, 10:55 am

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சிடலப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவர் சீதாராமன். நள்ளிரவு வீட்டின் வெளியே பலத்த சத்தம் கேட்டதை அடுத்து, சீதாராமன் வெளியே வந்து பார்த்து போது, பெட்ரொல் குண்டு வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள், சீதாராமன் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, கையில் தயாராக வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை பற்ற வைத்து வீட்டினுள் வீசி விட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகரனை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு வருகிறார்,
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!