பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் ; பிஎஃப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் சோதனை.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Author: Babu Lakshmanan
10 October 2022, 12:57 pm

கன்னியாகுமரி ; குமரி மாவட்டத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் கைதான பிஎப்ஐ நிர்வாகி வீட்டில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான இவரது வீட்டிற்கு முன், கடந்த மாதம் 24-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த குமரி காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில்,பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பிஎப்ஐ கட்சியை சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, முக்கிய நபரான குளச்சல் பகுதியை சேர்ந்த ஷமில்கான் என்ற வாலிபரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரை இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இந்த நிலையில் ,இன்று மதியம் குளச்சலில் உள்ள ஷமில்கான் வீட்டை வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் ஷமில்கான் பயன்படுத்திய லேப்டாப், 4-சிம் கார்டுகள், வங்கி பாஸ் புக், பிஎப்ஐ கட்சியால் வழங்கப்பட்ட சிறந்த சமூக சேவகருக்கான ஷீல்டுகள் உள்ளிட்ட 31 முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!