தனியார் கல்லூரி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. உயிர்தப்பிய மாணவர்கள் : திருச்சியில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 12:52 pm

தனியார் கல்லூரி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. உயிர்தப்பிய மாணவர்கள் : திருச்சியில் பயங்கரம்!!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரன்(21). இவர் கண்ணனூரில் உள்ள இமயம் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.

நேற்று மது போதையில் கல்லூரி வகுப்புக்கு பவித்ரன் சென்றதாக கூறப்படுகிறது. இதை கல்லூரி வகுப்பு ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன் தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டு வீசியபோது அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெட்ரோல் குண்டு வீசிய பவித்ரன் உட்பட ஐந்து மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!