குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி தகராறு.. செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 1:19 pm

மதுரை : மதுரையில் குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி நடந்த தகராறில், செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் சலீம். இவர் ஓராண்டுக்கு முன் அண்ணா பேருந்து நிலைய பகுதி வளாகத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டார்.

இந்நிலையில் இன்று ஓட்டலுக்கு மீண்டும் வந்த நிலையில், அருகில் உள்ள செல்போன் கடை ஊழியரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது, செல்போன் கடையில் குத்து பாட்டு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த பாடலுக்கு சவுண்டு வைக்க சொல்லியுள்ள நிலையில் வாக்குவாதமாக ஏற்பட்டது.

குடிபோதையில் இருந்தவரை கடை ஊழியர்கள் எச்சரித்த போது, ஆத்திரமுற்ற சலீம் பெட்ரோல் நிரப்பிய குளிர்பான பாட்டிலை கடை மீது வீசியதில், பெயர் பலகை கருகியது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சலீமை காவல்துறையினர் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!