பாஜக பிரமுகர் வீடு மாறியது தெரியாமல் பெட்ரோல் குண்டு வீச்சு.. தீ பற்ற வைக்காமல் வீசிய மர்மநபர் : பெரும் தேசம் தவிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2022, 11:58 am
திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே பாஜக போட்ட பொருப்பாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்த ஏவிபி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு காங்கேயம் பகுதியில் பஞ்சு மில் உள்ளது.
இந்த நிலையில், திருப்பூர், ஏவிபி லே-அவுட் பகுதியில் உள்ள இவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அமைப்பு பொறுப்பாளர் புதுக்கோட்டை பாலு என்பவர் குடியிருந்துள்ளார்.
தற்பொழுது அவர் வேறு வீட்டுக்கு குடி மாறி சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரு சக்கரத்தில் வாகன இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பாஜக அமைப்பு பொறுப்பாளர் தங்கியிருந்த வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
பெட்ரோல் குண்டை பற்ற வைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் நிகழவில்லை. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் லட்சுமணன் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமானது லட்சுமணன் மீது தொழில் போட்டியில் வீசப்பட்டதா? அல்லது பாஜக அமைப்பு பொறுப்பாளர் வீடு மாறியது தெரியாமல் அவரை குறி வைத்து செய்யப்பட்ட தாக்குதல் சம்பவமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பெட்ரோல் குண்டு வைத்து சம்பவம் நடந்த பகுதியில் பாஜக சார்பில் ரத்ததான முகாம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதனை தடுக்கும் வகையிலும் இந்த பெட்ரோல் குண்டு வைத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.