பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி : தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 8:20 pm

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22.09.2022 அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் உறுப்பினராக இருந்த வஹிதுர் ரஹ்மான் என்பவரை கைது செய்ய கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார்.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு குற்றவாளியான வஹிதுர் ரஹ்மான் (வயது 25) என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!