கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவர் விவசாயம் சார்ந்த இடுப்பொருள் வாங்க சங்கராபுரம் நகரப் பகுதிக்கு வந்துள்ளார்.மீண்டும் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு செல்லும் போது அவருடைய இருசக்கர வாகனத்தில் திடீரென பெட்ரோல் தீர்ந்து போனதால் அதே இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தனியார் பெட்ரோல் பங்க் சென்று நூறு ரூபாய் கொடுத்து ஒரு லிட்டர் பிடிக்கக் கூடிய வாட்டர் கேனில் பெட்ரோல்
வாங்கியுள்ளார்.
அப்போது அரை லிட்டர் -500ML பெட்ரோல் மட்டுமே வந்துள்ளது இதைப் பார்த்து அதிர்ந்து போனார் விவசாயி ஏழுமலை.அங்கு பெட்ரோல் பங்க் ஊழியரிடம் நான் நூறு ரூபாயை கொடுத்தேன் எனக்கு அரை லிட்டர் பெட்ரோல் மட்டுமே வந்துள்ளது இது எப்படி சாத்தியம் எனக் கேட்டார்.அதற்கு அவர் அசால்டாக இஷ்டமான இருந்தா போடு இல்லைனா போயிட்டே இரு நான் என்ன பண்றது அப்படி தான் வருது என கூறியதாக சொல்லப்படுகிறது.
விவசாயி ஏழுமலை அங்கு பெட்ரோல் போட வந்த மக்களிடம் யாரும் போடாதீர்கள் 100 ரூபாய் பெட்ரோல் போட்டால் அரை லிட்டர் பெட்ரோல் மட்டுமே வருகிறது எனக் கூறியுள்ளார்.மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி தன்னுடைய செல்போனில் பதிவு செய்து கொண்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.