இனி சைக்கிள் தான்…உச்சம் பெற்றது பெட்ரோல் விலை : 105 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2022, 12:31 pm

திண்டுக்கல் : கொடைக்கானலில் 105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை டீசல் 94 ரூபாய்க்கு விற்பனையானதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை அடைந்த நேரத்தில் கடந்த 137நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிரடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வழக்கமாக தளங்களை விட மலை வாசஸ்தலங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக விற்பது இயல்பாக ஒன்றாகும்.

இந்நிலையில் இன்று கொடைக்கானலில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 105.07 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசலின் விலை 94.73 ரூபாய்க்கும் விற்பனை ஆவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

மேலும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கக் கூடிய எரிபொருள் விலை ஏற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் கவலை அடைந்து இருக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…