கோவையில் ஊர்வலம் வரும் வ.உ.சி நினைவை போற்றும் புகைப்பட கண்காட்சி : இன்று எந்தெந்த இடங்களுக்கு விஜயம் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 11:59 am

கோவை : கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவை போற்றும் வகையில் நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் வ. உ .சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பேருந்தில் அவரது புகைப்படங்களை வைத்து கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் செல்லும். அங்கு மாணவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுவார்கள். அந்தவகையில் கோவை வந்துள்ள இந்த புகைப்பட கண்காட்சி பேருந்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

இந்த நகரும் புகைப்பட கண்காட்சியானது இன்று கோவை மாவட்டத்தில், கணபதி, சரவணம்பட்டி, அன்னூர், சிறுமுகை, கோவில்பாளையம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கிறது.

நாளை, குனியமுத்தூர், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, சேரிப்பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்கிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி