இன்னுமாடா பசை காயாம இருக்கு : மழைநீர் வடிகால் பற்றி 2021, 2022 ஒப்பிட்டு வெளியான புகைப்படம்.. நெட்டிசன்கள் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2022, 7:39 pm

டந்த ஆண்டுகளில் பெய்த அதி தீவிர கனமழைகளால் வெள்ளத்தில் சென்னை மிதந்தது அனைவரும் அறிந்ததே. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு திமுக அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தாண்டு பெய்த மழையால் சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியபடி உள்ளன. ஆனால் ஒரு சில இடங்களில் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் கருவிகள் கொண்டு வெளியேற்றி வருகின்றனர்.

இப்படி நடந்து கொண்டிருக்கையில், நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் தங்களது பகுதிகளில் மழை நீர் கடந்தாண்டை போல தேங்கவில்லை என்றும், சிலர் தேங்கியுள்ளதாகவும் போட்டோக்களை போட்டு பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒருவர் 2021ல் நீர் தேங்கியதாக ஒரு பகுதியை போட்டோ எடுத்து பதிவிட்டு, அருகிலேயே 2022ல் மழை நீர் தேங்கவில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் சிறப்பான பணி என சென்னை மாநகராட்சி, முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையர் ட்விட் கணக்குகளுக்கு டேக் செய்துள்ளார்.

ஆனால் அதில் சிவப்பு குறியீடு போட்டு தவறை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அந்த போட்டோவில் வீட்டின் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் 2021ல் அப்படியே உள்ளதை போலவே 2022லும் உள்ளது. இது எப்படி, பசை இன்னுமாடா காயாம இருக்கு என கிண்டலடித்து வருகின்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?